ஒரு துளி இரத்தத்தினால் மானிடத்தினை உயிர்ப்பிக்கும் பிரண்டிக்ஸ்

பிரண்டிக்ஸில் உள்ள எம்மால், தேசிய இரத்த மாற்று மையத்திற்கு கிட்டத்தட்ட 6,000 யூனிட் இரத்தத்தை தானம் செய்வதன் மூலம் மீண்டும் எங்கள் சொந்த மனித குலத்திற்கு உயிர் கொடுப்பதில் வெற்றி பெற்றுள்ளோம் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 2022 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட இந்த இரத்த தானத்தின் மூலம், பிரண்டிக்ஸ் குடும்பம் தேசிய இரத்த மாற்று மையத்திற்கு தொடர்ந்து 14 ஆண்டுகளாக வழங்கிய இரத்த அலகுகளின் அளவு 40,000 இரத்த அலகுகளைத் தாண்டியது.

பிரண்டிக்ஸில் நாங்கள் 11 ஆண்டுகளாக தனியார் துறையில் அதிக இரத்த தானம் செய்பவர் என்ற விருதைப் பெற்றுள்ளோம். இம்முறை பிரண்டிக்ஸ் இரத்த தானம் செய்பவர்களில் பிரண்டிக்ஸ் வந்துபிட்டிவள நிறுவனம், பிரண்டிக்ஸ் மட்டக்களப்பு நிறுவனம், பிரண்டிக்ஸ் கொக்கலை நிறுவனம், பிரண்டிக்ஸ் பொலன்னறுவை நிறுவனம், பிரண்டிக்ஸ் அவிஸ்ஸாவெல்ல நிறுவனம், மற்றும் பிரண்டிக்ஸ் ரிதிகம பினிஷிங் நிறுவனம் ஆகியவை முன்னணியில் உள்ளன. எம்முடன் கைகோர்த்துள்ள உத்வேகமான அங்கத்தவர்களின் அர்ப்பணிப்பினாலும் பங்களிப்பினாலும் பல வருடங்களாக விழித்தெழுந்த தீர்வுகள் மூலம் மனித குலத்தினை முன்னேற்றும் பிரண்டிக்ஸின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்க முடிந்தது.

2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில், இலங்கையில் இரத்த தானம் செய்பவர்களில் நூறு பேரில் ஒருவர் பிரண்டிக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது நமது பங்களிப்பு எவ்வளவு என்பதைக் எடுத்துக் காட்டுகிறது. எதிர்காலத்திலும் மனித குலத்தின் முன்னேற்றத்திற்க்காக  நாம் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.