"வாழ்க்கையை அனுபவிக்க கற்றுக்கொள்ளுங்கள்"

சவாலான வாழ்க்கையை சமநிலையில் வழிநடத்தி எதிர்பார்ப்புகளை வெற்றி கண்ட ஒரு கதாப்பாத்திரம் தான் இந்த முறை வியமன் TVயின் ‘ஹாந்துநகத்தொத் ஒபா மா’ / ‘நீங்கள் என்னை அறிந்தால்’ நிகழ்ச்சியில் இணைகிறார். அவர் பிரண்டிக்ஸ் குழும மனித வள சிரேஷ்ட பொது முகாமையாளர் கெலும் களுதொடகே ஆவார்.

“நான் என்னை அறிமுகம் செய்து கொண்டால், நான் எளிமையான ஒரு கதாபாத்திரம். பாடசாலை பருவத்தை எடுத்துக் கொண்டால், நான் ஒரு கிராமத்தில் வளர்ந்தேன். பாடசாலையில் உள்ள ஏனையவர்களை விட சாதாரண தர பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்று உயர்தரத்திற்கு மாத்தறையில் உள்ள ஒரு கல்லூரியில் நுழைய என்னால் முடிந்தது. நண்பனின் அறிவுரையால் முதலில் உயிரியல் பிரிவில் கற்க மேலதிக வகுப்புகளுக்குச் சென்றேன். ஆனால் அது என்னுடைய துறை அல்ல என்பதை உணர்ந்தேன். பல்கலைக்கழக அனுமதி பெறுவதே எனது தேவையாக இருந்தது. உரிய பல்கலைக் கழகக் கல்வியை முடித்து, பெறுபேறுகள் வருவதற்கு முன்னரே, இலங்கையின் முன்னணி நிறுவனமொன்றின் நிறைவேற்றுப் பதவிக்குள் நுழைய என்னால் முடிந்தது.

எனது பிரண்டிக்ஸ் வாழ்க்கையின் ஆரம்பம் முதலில் மிகவும் சவாலானதாக அமைந்தது. நம்பிக்கை எம்மை வாழ வைக்கிறது, ஆனால் நாம் நம்பிக்கைமீது மாத்திரம்  வாழ வேண்டியதில்லை. நாம் எமது எதிர்பார்ப்புகளை அடையும் போது வாழ்க்கையை அனுபவிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நான் வாழ்க்கையை மிகவும் ரசிக்கும் நபர். நான் இலங்கை முழுவதும் பயணம் செய்கிறேன்.

கடந்த ஆண்டு ஹைட்டியில் உள்ள எங்கள் சொந்த நிறுவனத்திற்குச் சென்று 8 முதல் 9 மாதங்கள் வரை வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய உலகில் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சியை நான் காண்கிறேன். உலகம் டிஜிட்டல் மயமாகிறது. மக்கள் தங்கள் தனிப்பட்ட ஆசைகளுக்குப் பின்னால்  ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல ஓடுகிறார்கள். அதனால் வாழ்க்கையை அனுபவிக்க மறந்து விடுகிரார்கள். சில சமயங்களில் மற்றவர் என்ன செய்கிறார் என்பதை எமது கண்ணோட்டத்தில் இருந்து மட்டுமே பார்க்கிறோம். ஆனால் சில சமயங்களில் அதற்காக அவர்கள் செய்த உழைப்பும் தியாகமும் கூட நமக்குத் தெரியாது. அவ்வாறு ஏணையவர்களை  பின்பற்றி பலர் தங்கள்  வாய்ப்புகளை இழந்துள்ளனர்.

உலகம் காலப்போக்கில் புத்துணர்ச்சி அடைகிறது. அது இயற்கையாகவே இயங்கும் ஒரு  செயற்பாடாகும். அது சில சமயங்களில் எமக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும். ஆனால் நாம் அதற்குத் தயாராகிவிட்டால், அதை ஏற்கத் தயாராக இருந்தால், இந்த உலகில் நம் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.