"நாங்கள் எங்கள் திட்டங்களை மாற்றியமைத்தாவது, எங்கள் இலக்குகளை நோக்கி செல்ல வேண்டும்."

ஒரு நபர் தனது இலக்குகளை அடைய உறுதியுடன் இருந்தால் மட்டும் போதாது. அதற்கு அந்த உறுதியுடன் பொருந்தக்கூடிய சிறப்புப் பண்புகளைக் கொண்ட ஆளுமையும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சிறப்புக் குணங்கள் நிறைந்த ஆளுமையுடன் தனது இலக்குகளை வெற்றிகரமாக முடித்தவர்தான் இம்முறை வியமன் தொலைக்காட்சியின் ‘ஹந்துநாகத்தொத் ஒப மா’/ “நீங்கள் என்னை அறிந்தால்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் ஆவார். அவர் தான் பிரண்டிக்ஸ் குழும மனிதவள முகாமையாளர்  செல்வி சவிந்திகா யாபா ஆவார்.

“சவிந்திகா யாபா ஒரு எளிய,  அனுபவங்களை பெற விரும்பும், ஒரு  சுதந்திரமான கதாபாத்திரம்.” செல்வி சவிந்திகா தன்னை  அப்படித்தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். தான் சுதந்திரமான குணத்திற்கு முக்கியக் காரணம் சிறுவயதில் பெற்றோர் கொடுத்த சுதந்திரம்தான் என்பதைச் சொல்ல அவர் மறக்கவில்லை.

மாத்தறை சுஜாதா மகளீர் கல்லூரியில் தனது கல்வியைப் பெற்ற பின்னர், அவர் வர்த்தக பிரிவில் உயர் கல்வியைப் பயின்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

“இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் போது நான் பிரண்டிக்ஸில் இன்டர்ன்ஷிப்பிற்காக  சேர்ந்தேன், இன்று பிரண்டிக்ஸின் குழு மனித வள முகாமையாளராக பணிபுரிகிறேன்.”

இந்த   வகையில், ஒரு நபருக்கு தொழில் வாழ்க்கைக்கு மட்டுமல்லாது, அன்றாட வாழ்க்கைக்கும் மதிப்புமிக்கதாகக் கருதுகின்ற, இருக்க வேண்டிய பண்புகளை பற்றி அவர் எங்களுடன் பகிர்ந்து கொண்டார், .

“சுதந்திரம் என்பது எந்தவொரு நபருக்கும் ஒரு முக்கியமான குணாதிசயம், மற்றும் ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய சிறப்பு குணாதிசயம் ஆகும். ஒரு பெண் தன் வேலையை சுதந்திரமாக செய்ய முடிந்தால்,  அவர் வாழ்க்கை எளிதாக இருக்கும்.”

“தனிமனிதர்களாக, வாழ்க்கையில் இலக்குகள் உள்ளன. அந்த இலக்குகளுக்கு நாம் செல்ல வேண்டும். இலக்குகளை நோக்கிய பாதையில் நாம் வெவ்வேறு திட்டங்களை வைத்திருக்கிறோம். ஆனால் நாம் ஒருபோதும் நமது இலக்குகளை மாற்றக்கூடாது. திட்டங்களை மாற்றி நமது இலக்குகளுக்கு செல்ல வேண்டும்.”