"எனக்கென்று சொந்தமாக ஒரு கலைக்கூடத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எதிர்ப்பார்ப்பாகும்"

பிரண்டிக்ஸ் குழும நிறுவனங்களில் உள்ளவர்கள் துணிகளைத் தைப்பதைத் தாண்டிய திறமைகள் நிறைந்தவர்கள் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு விடயமாகும். இன்று எம்முடன் இணைந்திருக்கும் பெண்மணி அதற்கு சரியான உதாரணம் ஆவார்.

பிறப்பிலேயே ஓவியக் கலையில் திறன் கொண்ட அவர், பிரண்டிக்ஸ் மீரிகம 02 இல் பணிபுரிகிறார். தற்போது அந்த நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணிபுரியும் அவரது பெயர் ராணி.

“பாடசாலை செல்லும் பருவத்திலிருந்தே நான் கேட்ட பாடல்களை சித்திரமாக வரைய ஆரம்பித்தேன். நான் வரைந்த படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன, அதனால் தான் தொடர்ந்து சித்திரம் வரைந்தேன்.” அப்படித்தான் தனது ஓவியம் வரைந்த வரலாற்றை எம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

பிரண்டிக்ஸ் வியமன் சித்திர போட்டியில் வென்ற பிறகு, நிறுவனத்தில் உள்ள சக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகத்தினரின் தனிப்பட்ட உருவப்படங்களை வரைவதற்கு ஊக்கம் பெற்றார்.

அந்த பரிச்சயத்துடன், அவள் வாழ்க்கையில் மற்றொரு புதிய அத்தியாயத்தைக் ஆரம்பிக்கிறாள்; அதாவது, ஒரு தொழில்முறை கலைஞராக தனது வேலையைத் தொடங்குவதன் மூலம்.

“இது எனது தொழில் ரீதியான வாழ்க்கையில் கிடைத்த மாபெரும் உதவியாகும்.” அப்படித்தான் தன் கதையில் புதிய அத்தியாயத்தை பற்றி குறிப்பிட்டாள். இவரது படைப்புத் திறனை நன்கு புரிந்து கொண்ட பிரண்டிக்ஸ் மீரிகமை 02 நிர்வாகத்தினர், அவரது தொழில்முறை ஓவியத்தை முன்னோக்கி கொண்டு செல்ல பல வாய்ப்புகளை வழங்கினர்.

“நான் எங்கள் நிறுவனத்தின் ஓய்வு அறைக்கு நிறைய படங்கள் வரைந்தேன். மேலும், அந்த நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலைப் பிரிவில் பணிபுரிகிறேன். போயா நாட்களில் செய்யும் “தோரணை”க்கும் சித்திரம் வரைகிறேன்.” பிரண்டிக்ஸ் மூலம் தனக்கு கிடைத்த வாய்ப்புகள் குறித்து அவர் எங்களிடம் கூறினார்.

அவள் எங்களிடம் கூறியது போல், அவளுடைய எதிர்கால நம்பிக்கை,  கலையுடன் இணைக்கப்பட்டுள்ள மிகவும்  அழகானதாகும். அதாவது, தன் ஓய்வு பொழுதைக் கழிக்க தன் வீட்டில் ஒரு கலைக்கூடத்தை உருவாக்குவது ஆகும்.

எனவே, பிரண்டிக்ஸ் மீரிகம 02 க்கு மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் கிடைத்த மாபெரும் பரிசாக திருமதி ராணியின் திறமையை பிரண்டிக்ஸில் உள்ள நாங்கள் பார்க்கிறோம். எனவே, பிரண்டிக்ஸ் மீரிகம 02 இன் நிர்வாகமும், ஒட்டுமொத்த பிரண்டிக்ஸ் குழுமமும் இந்த மிகவும் திறமையான கலைஞரின் எதிர்கால நம்பிக்கைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.