உங்களை ரீசார்ஜ் செய்துகொள்வோமா?

சோர்வாக இருக்கிறீர்களா? சோம்பேறித்தனமாக உணர்கிறீர்களா? அனைத்தும் வேண்டாம் என்ற விரக்தியான மனநிலையுடன் உள்ளீர்களா? தினமும் ஒரே முறையிலான செயற்பாடுகள், ஒரே மாதிரியான பழக்க வழக்கங்களினால் நாட்கள் ஒரே முறையில் கடந்து செல்வதால் நீங்கள் ஒரு உதாசீனமான மனநிலையை உணர்கிறீர்களா?

எனவே இன்னும் ஏன் தாமதமாகிறீர்கள்? நீங்களே உங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

சற்றுஓய்வு எடுத்து பின்னர் ஆழமாக மூச்சு விடுங்கள். உங்களது அறையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அறையில் உள்ள பொருட்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக மாற்றி அமைத்து புதிய முறையில் வையுங்கள். உங்கள் அலுமாரியை அடுக்கி வையுங்கள். கட்டிலில் புதிய படுக்கை விரிப்புகளை விரியுங்கள்.

நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை ஒரு பட்டியலிட்டு அவற்றை ஒவ்வொன்றாக செய்யும்பொழுது அதனை பட்டியலிலிருந்து நீக்கிவிடுங்கள். உங்களுக்கு நெருங்கிய ஒருவருடன் நடைப் பயணம் செல்லுங்கள். உதவி தேவைப்படும் ஒருவருக்கு உதவுங்கள். உங்களுக்கு பிடித்த சில பாடல்களை சுதந்திரமாக செவிமடுங்கள். உங்கள் bagஐ சுத்தம் செய்யுங்கள். யூடியூப் சென்று ரிலாக்சிங் மியூசிக் என்று தேடுங்கள், வரும் பட்டியலிலிருந்து நீங்கள் விரும்பும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, மாலையில் இசையை ரசித்துக் கொண்டே உங்கள் வேலையைச் செய்யுங்கள். உங்கள் ஃபோனின் வால்பேப்பர், ஸ்கிரீன் சேவர், ரிங்டோனை மாற்றிக்கொள்ளுங்கள். கொஞ்ச நாளாக சரியாகப் பேச முடியாத உங்களுக்கு நெருக்கமான ஒருவரிடம் பேசுங்கள். பேஸ்புக் மற்றும் டிக்டாக் போன்றவற்றை நீங்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த முறையை மாற்றி, புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா என்று பாருங்கள். தூங்கும் போது போனை தூரமாக ஒதுக்கி வையுங்கள்.

நீங்கள் நினைக்கும் முறையை மாற்றிக்கொள்ளுங்கள். உங்களைப் பற்றி எதிர்மறையாக சிந்திப்பதை நிறுத்துங்கள். ஒரு கணம் நிறுத்தி, நீங்கள் எவ்வளவு தூரம் வந்துவிட்டீர்கள் என்று சிந்தியுங்கள். நீங்கள் எவ்வளவு வலிமையானவர், தைரியமானவர், கனிவானவர் என்று சிந்தியுங்கள். உங்கள் நாளை புதிய முறையில் ஆரம்பியுங்கள். முடிந்தவரை பயனுள்ள வகையில் நாளை செலவிடுங்கள். திருப்தியுடன் நாளை முடித்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் ரீசார்ஜ் செய்யப்படுவதை நீங்களே உணர்வீர்கள்!