பாதரசத்தால் உருவாக்கப்பட்ட பிரண்டிக்ஸ் சின்னத்தின் கதை

மாறிவரும் உலகத்துடன் தொடர்ந்து புதுமைகளை புகுத்தி, பிரண்டிக்ஸ் மற்றொரு மாற்றத்திற்க்காக தடம் பதித்துள்ளது. பாதரசத்தின் மூலம் உருவான பிரண்டிக்ஸ் லோகோவால் குறிப்பிடப்படும் மதிப்புகளுக்கு புதிய பொலிவினை கொடுக்கப் போகிறோம் என்று நாங்கள் முன்பே உங்களுக்கு கூறியிருந்தோம். மாறிவரும் உலகின் தேவைக்கேற்ப நுகர்வோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாங்கள் புதியதாக சிந்தித்தோம்.

புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்துடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் ஆடை வர்த்தக நாமமான பிரண்டிக்ஸ் மற்றும் பாதரசம் எனப்படும் விலைமதிப்பற்ற உலோகத்தின் குணாதிசயங்கள் அற்புதமாக பொருந்துகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். பிரண்டிக்ஸ் சின்னத்தால் குறிப்பிடப்படும் பிரண்டிக்ஸ் மதிப்புகளுக்கு புதிய பொலிவினை சேர்த்தமை தொடர்பான எங்கள் கதை இது.

நாம் அனைவரும் காலப்போக்கில் காலத்திற்கு ஏற்ப புதுப்பிக்கப்படாமல் இருந்தோம் என்றால், நம் சார்புநிலையை இழந்துவிடுவோம். உலகிற்கு விழித்தெழுந்த தீர்வுகளை வழங்கும் ஆடை வர்த்தக நாமமான பிரண்டிக்ஸ், காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைத்ததன் காரணமாகவே இந்தளவுக்கு வெற்றிகரமாக முன்னேறி வர முடிந்தது. இந்த பயணத்திற்கு நம்மை வழிநடத்திய பல மதிப்புகள் உள்ளன. மூன்று முக்கிய மதிப்புகள் அல்லது குணாதிசயங்கள் தான் நெகிழ்வுத்தன்மை, புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மை. பிரண்டிக்ஸ் சின்னம் (லோகோ) இந்த மூன்று மதிப்புகளைக் குறிக்கிறது. இது எங்கள் வாடிக்கையாளர்களுடன் கையாளும் போது நாங்கள் வழங்கும் மதிப்புகளைக் குறிக்கிறது.

பிரண்டிக்ஸில், எந்தச் சூழலையும் நெகிழ்வாகத் தாங்கி முன்னேறும் திறன் எங்களிடம் உள்ளது. அந்த வழியில் தொடர விரும்பும் வலுவான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சிறந்த குழு எங்களிடம் உள்ளது. மேலும், ஆடைத் துறையில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாறிவரும் உலகிற்கு மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் எப்போதும் முயற்சித்து வருகிறோம். புதுமையான தயாரிப்புகளை வழங்குவதன் மூலம் ஆடை உலகில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் எப்போதும் பணியாற்றி வருகிறோம்.

நிலைத்தன்மை பற்றிக் குறிப்பிடப்பட்டவுடன், எங்கள் பசுமையான நிலையான திட்டங்களைப் பற்றி நீங்கள் நினைக்கலாம். பசுமையான நிலைத்தன்மையின் கீழ் பூமியை எழுப்ப நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம். இந்த பூமியில் ஆயிரக்கணக்கான தாவரங்களை நட்டு, பச்சைவீட்டு வாயு உமிழ்வைக் குறைப்பதன் மூலமும், பிரண்டிக்ஸ் தொழிற்சாலைகளின் வேலைகளுக்கு சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், எங்களின் அனைத்து தொழிற்சாலைகளின் கார்பன் வெளியேற்றத்தை நிகர பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர நாங்கள் உழைத்து வருகிறோம். இதுவரை, எங்கள் நிலைத்தன்மை பயணத்தில் 6 பிரண்டிக்ஸ் தொழிற்சாலைகளின் கார்பன் உமிழ்வை நிகர பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்றுள்ளோம்.

பிரண்டிக்ஸ், விழித்தெழுந்த தீர்வுகளுடன் முன்னோக்கி நகர்கிறது, இந்த புதிய மதிப்புகள் மற்றும் உருமாறும் மாற்றங்களுடன் புதிய ஆற்றலுடன் முன்னேற நாங்கள் தயாராக இருக்கிறோம்…