இம்முறை வியமன் தொலைக்காட்சியின் “ஹந்துணாகதத்தொத் ஒப மா” / “நீங்கள் என்னை அறிந்துகொண்டால்” நிகழ்ச்சியின் ஊடாக , பிரண்டிக்ஸ் இன்டிமேட்டின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. உபுல் உபயவன்ச, கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள இணைந்தார். அவர் கிராமத்திலிருந்து நகரம் நோக்கிய பயணத்தை நினைவு கூர்ந்து தனது உரையாடலைத் தொடங்கினார்.
“கிராமத்து பாடசாலையிலிருந்து புலமைப்பரிசில் பரீட்ச்சையில் சித்தியடைந்து கொழும்புக்கு வந்தேன்.அது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக அமைந்தது.முதலில் கொழும்புக்கு வரும்போது மிகவும் பதட்டமாக இருந்தது.அத்துடன் கொழும்புக்கு வரும்போது மிகவும் பயமாக இருந்தது.பின்னர், காலப்போக்கில் நான் அதற்க்கு பழகிவிட்டேன்.”
“நான் பாடசாலை காலத்தில், தனிமையில் இருத்த காலம் எனக்கு உந்து சக்தியாக இருந்தது, எனக்கு அதிகபட்ச சுதந்திரம் இருந்தது, ஆனால் நான் என் அம்மா மற்றும் அப்பாவின் கட்டமைப்பிற்குள் வேலை செய்ததால், தனியாக எப்படி வாழ்வது என்பதற்கு நல்ல அடித்தளம் அமைந்தது.” வெற்றிகரமான வாழ்க்கைப் பயணத்திற்கு எப்படி அடித்தளம் அமைத்தார் என்பதை நம்முடன் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
“நான் மிகவும் சாதாரணமான நபர். நான் நிறைய பேரை நம்புகிறேன். மேலும் யார் வேண்டுமானாலும் என்னை நம்பலாம். அது எனக்கு பல காரியங்களுக்கு உதவியது.” அவர் அடக்கமானவர் என்பதும் அவரது வார்த்தைகளில் இருந்தே தெரிய வந்தது.