அக்டோபரில் பிரண்டிக்ஸ் இரத்த தானம்

“பிரண்டிக்ஸ் ருஹிரு தான”, இரத்த தானம் திட்டம் என்பது ஒவ்வொரு மாதமும் பல பிரண்டிக்ஸ் நிறுவனங்களால் கூட்டாக நடத்தப்படும் ஒரு தனித்துவமான நிகழ்ச்சியாகும். கடந்த அக்டோபர் மாதத்திலும் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஏகலை, மீரிகம, இரத்மலானை பினிஷிங், கிரித்தலை மற்றும் பொலன்னறுவை பிராண்டிக்ஸ் நிறுவனங்கள் இதற்கு பங்களித்தன.

இந்த இரத்த தான நிகழ்ச்சிகள் கடந்த ஒக்டோபர் மாதம் முறையே, 4 ஆம் திகதி பிரண்டிக்ஸ் ஏகலை நிறுவனத்தில், 13 ஆம் திகதி பிரண்டிக்ஸ் மீரிகம நிறுவனத்தில் , மற்றும் 25 ஆம் திகதி பிரண்டிக்ஸ் இரத்மலானை பினிஷிங் நிறுவனத்திலும் இடம்பெற்றது. அதேபோல் அக்டோபர் 20 அன்று பிரண்டிக்ஸ் கிரித்தலே நிறுவனத்தில் நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சி ஒக்டோபர் 14 ஆம் திகதி பிரண்டிக்ஸ் பொலன்னறுவை நிறுவனத்தில் நடைபெற்றது.

அக்டோபர் மாத இரத்த தான நிகழ்வுகளில் போது 607 பைண்ட் இரத்தம் பிரண்டிக்ஸிலிருந்து தேசிய இரத்த மாற்று மையத்திற்கு தானமாக வழங்கப்பட்டது. இலங்கையில் பல வருடங்களாக பிரண்டிக்ஸ் குழுமம் மிகப்பெரும் கூட்டாண்மை இரத்த தானம் வழங்கும் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதை இந்த தொடர்ச்சியான வேலைத்திட்டங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

2022 ஆம் ஆண்டில் மட்டும் பிரண்டிக்ஸ் உறுப்பினர்களால் 5,700 பைண்டுகளுக்கு மேல் இரத்தம் தேசிய இரத்த மாற்று மையத்திற்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. 2011 முதல், பிரண்டிக்ஸ் குழுமம் 42,000 பைண்டுகளுக்கு மேல் இரத்தத்தை மையத்திற்கு தானம் செய்துள்ளது. இரத்த தானம் செய்யும் ஒவ்வொரு நூறு இலங்கையர்களில் ஒருவர் பிரண்டிக்ஸ் குழுமத்தில் உறுப்பினராக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் வெற்றிக்கும் தொடர்ச்சிக்கும் பிரண்டிக்ஸ் உறுப்பினர்களின் செயலூக்கமான பங்களிப்பு மிகப்பெரிய காரணியாக உள்ளது என்பது இரகசியமல்ல.