இந்து மக்களின் மிக முக்கியமான பண்டிகையான தீபாவளி மிகவும் வண்ணமயமாகவும், ஒளிமயமாகவும் கொண்டாடப்படுகிறது. தீபம் என்றால் விளக்கு என்றும் ஆவளி என்றால் வரிசையாக நிற்பது என்றும் பொருள். எனவே, வரிசையாக விளக்குகளை ஏற்றி, தீப ஒளியினால் ஒளிமயமாகிய இறைவனை வழிபடும் மங்களகரமான நாள் தீபாவளி எனப்படுகிறது. தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்கள் மற்றும் பல பழங்கால கதைகள் உள்ளன. நரகாசுரன் என்ற அரக்கனை கிருஷ்ண பகவான் வீழ்த்தியது தீபாவளி நாளில்தான் என்று கூறப்படுகிறது. வலிமைமிக்க, மூர்க்கமான இராவணனை அழித்துவிட்டு இராமர் அயோத்திக்கு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
தீபாவளி தினத்தன்று அனைவரும் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி, புது வஸ்திரம் அணிந்து கொண்டு கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். இந்துக்கள் தங்கள் வீடுகளை விளக்குகள் மற்றும் கோலங்களால் அலங்கரிக்கின்றனர், அவை பூமியில் வரையப்பட்ட அலங்காரங்களாகும். இவ்வாறு, தீபாவளிப் பண்டிகையானது மேலே குறிப்பிட்ட சமயச் சடங்குகளைச் செய்து மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
வியமன் டி.வி.யின் “வியமன் வந்தனா” நிகழ்ச்சியின் ஊடாக தீபாவளியை முன்னிட்டு உங்களுக்காக கொண்டுவரப்படும் இந்த நிகழ்ச்சி, வத்தளை ஹேகித்த ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்தாகும்.