ஜனாதிபதி விருதினால் மீண்டும் ஜொலிக்கும் பிரண்டிக்ஸ்

60,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட, நாட்டின் மிகப்பெரிய பெரிய அளவிலான ஆடை ஏற்றுமதிக் குழுமங்களில் ஒன்றான பிரண்டிக்ஸ், இந்த ஆண்டும்  ஜனாதிபதி ஏற்றுமதி விருதைப் பெற்றுள்ளது.

நாட்டின் ஏற்றுமதித் துறையின் நிலையான வளர்ச்சிக்கான பங்களிப்பிற்காகவும், நாட்டின் பாரிய அளவிலான ஆடைத் தொழிலில் துறையின்  இன் பிரதான பங்கிற்காகவும் பிரண்டிக்ஸ் குழுமத்திற்கு இந்த ஆண்டு விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

உலகின் பல புகழ்பெற்ற ஆடை வர்த்தக நாமங்கள் பலவற்றுக்கு  ஆடைகளை உருவாக்கும் பிரண்டிக்ஸ் குழுமத்திற்கு, அதன் உறுப்பினர்களின் வலுவான அர்ப்பணிப்பும், தலைமைத்துவத்தின் சிறந்த வழிகாட்டலின் மூலமும்  இத்தகைய சாதனைகளை அடைய முடியும் என்பது இரகசியமல்ல.