பங்குனி அல்லது மார்ச் மாதத்தின் ஆரம்பமே மிகவும் அழகாக உள்ளது. காரணம் பிரண்டிக்ஸ் அங்கத்தவர்களாகிய எமக்கு சில சிறப்பான நாட்களை இந்த மாதம் கொண்டுள்ளது. சர்வதேச மகளிர் தினம் மற்றும் உலக தண்ணீர் தினம் அவற்றில் விஷேடமான நாட்களாகும். இந்த ஆண்டு மகளிர் தினத்திற்குரிய எங்கள் கருப்பொருள் ‘முத்துக்களைப் போல நண்பர்களாக ஜொலித்திடுங்கள்’ ஆகும். பிரண்டிக்ஸ் உண்மையிலேயே மின்னும் முத்துக்களை உற்பத்தி செய்கிறது. அந்தவகையில், ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் சொந்த திறன்கள் மூலம் உயர் நிர்வாகத்திற்கு முன்னேறுவதற்கான பாதை திறந்திருக்கிறது என்று நாங்கள் கூறுகிறோம். பிரண்டிக்ஸின் மற்றொரு தனித்துவமான பலம், அதன் மதிப்புகள் மற்றும் புத்தாக்கங்களுக்கான அதன் அர்ப்பணிப்பு ஆகும்.
உங்கள் ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலாவும்போது எங்கள் வலைத்தளத்திற்கு வாருங்கள். நீங்கள் நுண்ணறிவுள்ள கட்டுரைகள், கவிதை படைப்புகள் மற்றும் கண்கவர் கலைப்படைப்புகளையும் காணலாம். அழகான மார்ச் மாதத்தை அனுபவியுங்கள்….
உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
ரேணுகா பண்டாரிகொட.